வாழைப்பழத் தோல் உண்மையில் கரும்புள்ளிகள், முகப்பரு நீக்க உதவுமா?!
Banana Peel For Face : வாழைப்பழ தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, அதை முகத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் அனைவரும் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், வாழைப்பழம் போலவே அதன் தோலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஆம், வாழைப்பழத்தை போலவே வாழைப்பழத் தோலில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் பலன்களை அறிந்த பிறகு இனிமேல் அதை தூக்கி எறிய மாட்டீர்கள். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும், எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தலாம். அதே வேளையில், அதன் தோல் சரும பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா?
இதையும் படிங்க: Banana Peel On Hair : இத படிச்சா இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறிய மாட்டீங்க! வியக்க வைக்கும் நன்மைகள் இதோ..!
நிபுணர்கள் கூற்றுப்படி, வாழைப்பழ தோலில் கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் அலர்ஜி எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளது. இவை அனைத்தும் நம் முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
வாழைப்பழத் தோலை பேஸ்டாக்கி, அதில் மஞ்சள் மற்றும் சர்க்கரையை நன்கு கலந்து அதை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவாகும் இதை நீங்கள் வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.
இதையும் படிங்க: வாழைப்பழத்தோலின் நன்மைகள் தெரிஞ்சா இனி தூக்கி எறிய மாட்டீங்க!
வாழைப்பழத் தோல் பேஸ்டில் ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை கலந்து அதை முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், உங்கள் முகத்தில் உள்ள கறைகள், கரும்புள்ளிகள் குறையும். இதை நீங்கள் வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.
முக சுருக்கம் வயதானவர்களுக்கு மட்டுமல்ல தற்போது இளைஞர்களுக்கு கூட வருகிறது. எனவே, ஒரு செலவில்லாமல் முகச்சுருக்கங்களை நீக்க, வாழைப்பழத் தோலை தினமும் முகத்தில் மெதுவாக தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.