டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி முதன்மை இயக்குநர் டாக்டர் நிஷித் சந்திரா இதுகுறித்து பேசிய போது, “ஒரு இருதயநோய் நிபுணராக, இதய ஆரோக்கியத்தின் அடிப்படை விஷயமே தினசரி உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது தான். தினமும் ஏதேனும் ஒரு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது இதயத்திற்கு நன்மை பயக்கும்.” என்று கூறினார்.
பெங்களூரு, ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர். சிராக் டி இதுகுறித்து பேசிய போது, “இருதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான மிக முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி இதய தசையை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் எடை, இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.
குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதும், சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பதும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமைகிறது. உடற்பயிற்சிக்காக, வாரத்தின் 5 அல்லது 6 நாட்களில் சுமார் 30 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சியை செய்ய முயற்சிக்கவும். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, பைக்கிங், நீச்சல் - உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் எதுவாக இருந்தாலும் சிறந்தது.” என்று தெரிவித்தார்.