
நாம் சாப்பிடும் உணவு பசியை ஆற்றும் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பசி என்றால் எதையும் கொடுத்தாலும் சாப்பிடுபவர்கள் நம்மில் பலர் உண்டு. ஆனால் பெரும்பாலானோர் சாப்பாடு என்றாலே அதில் சுவையை மட்டுமே விரும்புவார்களே தவிர, அது ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதை பற்றி யோசிக்கமாட்டார்கள்.
அந்த வகையில் நாம் சாப்பிடும் சில உணவுகளில் தீங்கு பற்றி தெரிந்தோ தெரியாமலோ அந்த உணவுகளின் சுவை, அதன் வாசனை, மற்றும் பிடித்தது போன்றவற்றிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமே தவிர, சில் உணவுகளின் விபரீதமான காம்பினேஷன் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பதை அறிவதில்லை. சொல்லப்போனால் ஒரே நேரத்திலும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகோ சாப்பிடும் சில உணவுகளின் காம்பினேஷனால் சரும பிரச்சனை, கீழ்வாதம் மற்றும் நம் உடலில் உள்ள உறுப்புகள் மோசமான தீங்கை ஏற்படுத்தும் தெரியுமா?
இன்னும் சொல்ல போனால் முரண்பாடற்ற உணவை சாப்பிடுவதால் உடலில் நச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து ஹார்மோன் சமநிலையை பாதிக்குமாம். எனவே எந்தெந்த உணவுடன் எவற்றை சாப்பிடக்கூடாது என்பதையும், குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் சாப்பிடக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக அசைவ உணவை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடக்கூடாது. அதற்கான காரணங்களும் பல உண்டு.
அது ஏன்?
அசைவ உணவுகளில் புரதம், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடனே ஹீமோகுளோபின் எண்ணிக்கையை பராமரிக்கவும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அசைவத்தேகு எதிரான உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு, ஒவ்வாமை உட்பட்ட பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
நாளடைவில் இதனால் உடலில் பல தீவிரமான பிரச்சினைகள் வரும். ஆக, அசைவ உணவு சாப்பிட்ட பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
அசைவ உணவிற்கு பிறகு சாப்பிடக்கூடாதவை:
நீங்கள் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு ஒருபோதும் பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடவே கூடாது. பால் உடலை குளிர்ச்சியாக்கும் அசைவ உணவுகள் உடலை சூடாக்கும் .எனவே இவை இரண்டும் ஒன்றாக கலந்தால் உடலில் ஹார்மோன் பிரச்சனை ஏற்பட்டு, உடலானது மோசமாக பாதிக்கப்படும் மற்றும் ஒவ்வாமை ஏற்படும்.
மீன் & பால் பொருட்கள்
மீன் சாப்பிட்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களை சாப்பிட்டால் ரத்தத்தில் எதிர்வினையை ஏற்படுத்தும் மற்றும் சருமத்தின் நிறத்தை கெடுக்கும், ஹார்மோன் பிரச்சனையை உண்டாக்கும்.
இதையும் படிங்க: பப்பாளி கூட இந்த '5' உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க!!
நினைவில் கொள்:
நீங்கள் பால் குடித்த பிறகு ஒருபோதும் கோழி ஆடு மீன் போன்ற எந்த ஒரு அசைவ உணவுகளையும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இவை இரண்டிலும் புரதங்கள் நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும் மற்றும் ஹார்மோன் பிரச்சனை ஏற்படும். இது தவிர நோய் எதிர்ப்பு அமைப்புகள் மோசமாக பாதிக்கப்படும்.
பால் மட்டுமின்றி பால் சம்பந்தமான பொருட்கள் அதாவது தயிர் டீ, காபி போன்றவற்றை அசைவ உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. இது தவிர கிரீன் டீ மூளிகட்டி குளுக்கோஸ் போன்ற பானங்களையும் அசைவ உணவிற்கு பிறகு குடிக்கவே கூடாது இதனால் வயிற்று எரிச்சல், அஜீரணம் மற்றும் உடலில் சூடாக்கும்.
சூடான நீர் குடிக்கலாம்
நீங்கள் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு சூடான நீர் குடிப்பது ரொம்பவே நல்லது. இதனால் உணவு சீக்கிரமாகவே செரிமானமாகும் மற்றும் உடலில் படியக்கூடிய கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
இதையும் படிங்க: சுரைக்காய் ஆரோக்கியமானது... ஆனா இந்த '5' உணவுகளுடன் மட்டும் மறந்தும் சாப்பிடாதீங்க!