3. முறையாக குளிக்க வையுங்கள்
மழை காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்படாமல் இருக்க சூடான தண்ணீரில் குளிக்க வைப்போம் ஆனால் இப்படி அடிக்கடி செய்து வந்தால் குழந்தையின் சருமம் சீக்கிரமாகவே வறண்டு போய்விடும். எனவே அப்படி ஏதும் நடக்காமல் இருக்க, உங்கள் குழந்தையை சீக்கிரமாகவே குளிப்பாட்டுங்கள்.
4. மழைக்கால ஆடைகளை பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்கவும், அவர்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும், காட்டன் மற்றும் லேசான ஆடைகளை அவர்களுக்கு போடவும். குழந்தையின் சருமத்திற்கு எரிச்சலூட்டும் ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
5. மாய்சரைசர் பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் குழந்தைகளின் சருமம் வறண்டு போவதை தடுக்க மாய்ஸ்ரேசர் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இதனால் சருமம் வறண்டு போவது தடுக்கப்படும் அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!