3. ஹெர்ரிங் மீன்
இந்த வகை மீனானது EPA மற்றும் DHA என்ற இரண்டு வகை என அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. மேலும் இவை உடலில் வீக்கத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது இது தவிர இந்த மீன் சாப்பிட்டால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
4. கானாங்கொளுத்தி மீன்
இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மீனில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன இந்த மீன் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிது உதவும்.
5. மத்தி மீன்கள்
இந்த மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இந்த அமிலம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது மேலும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செல்லினம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால், அவை உடலில் ரத்த அளவை குறைக்க உதவுகிறது.