
தற்போது நாம் அனைவரும் மோசமான வாழ்க்கை மற்றும் உணவு பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பதற்காக பலர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். அப்படி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் ஒரு மணி நேரமாவது வாக்கிங் செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தினமும் வாக்கிங் செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
தொடர்ந்து நடைபயிற்சி செய்து வந்தால் உயரத்தை அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு போன்ற கடிமான பிரச்சனைகளை சுலபமாக தவிர்க்கலாம். தினமும் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், வாக்கிங் செய்யும் முன் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் அதன் பலன்களை முழுமையாக பெற முடியும். எனவே வாக்கிங் அல்லது எந்த ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் காலை நடைபயிற்சி செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை:
1. சூடான நீர் குடிக்கவும்
நீங்கள் தினம் காலை வாக்கிங் செல்வதற்கு முன்பாக கண்டிப்பாக சூடான நீர் குடிக்க வேண்டும் அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஒருவேளை நீங்கள் குளிர்ச்சியான நீரை குடித்தால் அதனால் உங்களுக்கு தொப்பை அதிகரிக்கும். எனவே நீங்கள் வாக்கிங் செல்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் சூடான நீர் குடிப்பதை பழகிக் கொள்ளுங்கள்.
சூடான நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
தினமும் காலை வெறும் வயிற்றில் சூடான நீர் குடிப்பதால் செரிமான அமைப்பு மேம்படும், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், உடலை எப்போது நீரேற்றமாக வைத்திருக்கும். இதனால் உடல் எப்போதும் ஆற்றலுடன் இருக்கும். இது தவிர, வாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் தசைவிறைப்பு தன்மையை நீக்கும் மற்றும் சருமத்தை மேம்படுத்தும்.
வயிற்றை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்!
நீங்கள் தினமும் காலை வாக்கிங் அல்லது எந்தவொரு உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக கண்டிப்பாக உங்களது வயிற்றை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். வயிற்றை சுத்தம் செய்தால் உடற்பயிற்சி, வாக்கிங் அல்லது யோகா செய்வதற்கு மிகவும் இலகுவாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும். ஒருவேளை நீங்கள் உங்களது வயிற்றை சுத்தம் செய்யாமல் வாக்கிங் சென்றால் மலச்சிக்கல் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: இந்த '2' பிரச்சனை இருக்குறவங்க வீட்டில் செருப்பு போடாமல் நடக்காதீங்க.. பிரச்சினையாகிடும்!
தினமும் வாக்கிங் செல்வதற்கு முன்பாக வயிற்றை சுத்தம் செய்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும். குடல் இயக்கம் உங்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் பல்வேறு நோய்களிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். அதுவும் குறிப்பாக குடல் இயக்கமானது சிறுநீரகத்தை ரொம்பவே ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். இது தவிர குடல் இயக்கம் மன அழுத்தத்தை குறித்து மன ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
இதையும் படிங்க: உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க வைக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா?