
பொதுவாக சமையல் அறையில் சமைக்கும் போது அடுப்பை சுத்தி மற்றும் சுவற்றில் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும். இதனால் அழுக்குகள், தூசிகள் விரைவாகவே அதில் படிந்து விடும். அது மட்டுமின்றி, அவற்றை சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இன்றைய நாட்களில் சமையலறையில் சமைக்கும்போது வெளிப்படும் புகையை விரைவாக அகற்ற எல்லாருடைய வீட்டின் கிச்சனிலும் சிம்னி உள்ளது.
இது பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிதாக இருக்கும். ஆனால் இதை சுத்தம் செய்வது மிகவும் சவாலானது காரியம். கிச்சன் சிம்னியை நீங்கள் அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் அவற்றில் எண்ணெய் மற்றும் அழுகுகள் படிந்து, அவை பழுதடைய வாய்ப்பு உள்ளது.
இது தவிர, நீங்கள் கிச்சன் சிமினியை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் இதனால் ரெண்டு பாதிப்புகள் வரும். அதில் ஒன்று அதில் கிருமிகள், பூஞ்சைகள் உருவாகி அவற்றின் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்றுகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டாவது சிம்னி வழியாக புகை வெளியேறாது.
இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலனை கருதியும், கை வலிக்காமல், அதிக முயற்சியும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் சிம்னியை எளிதாக சுத்தம் செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி தான் இந்த பதிவில் சொல்லப் போகிறோம். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் எந்த சிரமமுமின்றி உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் சிம்னியை எளிதாக சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.
கிச்சன் சிம்னியை எளிதாக சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:
1. முடியை சுத்தம் செய்ய :
ஒரு துணியில் வினிகரை நனைத்து அதை கொண்டு சிம்னியின் முடியின் எல்லா பகுதிகளிலும் நன்றாக துடைக்கவும். இப்படி செய்தால் மூடி மேல் படிந்திருக்கும் கரைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
2. ஃபில்டர் & வலைகளை சுத்தம் செய்ய :
இதற்கு ஒரு வழியில் வினிகர் பேக்கிங் சோடா சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இப்போது ஃபில்டர் மற்றும் வலைகளை இதில் கூற வையுங்கள் 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து சுத்தமான நீரில் கழுவுங்கள்.
3. எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க :
ஃபில்டர் மற்றும் வலைகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றவும். பிறகு 30 நிமிடம் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கினால் எண்ணெய் பிசுபிசுப்பு கறை நீங்கியிருக்கும். பின் சுத்தமான தண்ணீரில் கழுவி துடைக்கவும்.
இதையும் படிங்க: கிட்சன் அலமாரிகளில் உள்ள விடாப்படியான எண்ணெய் பிசுக்கை ஈஸியா சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்!
கிச்சன் சிம்னியை எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்?
பொதுவாகவே உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் சிம்னியை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் சுத்தம் செய்தால் போதும். ஒருவேளை உங்கள் வீட்டில் அதிக அளவு எண்ணெய் அல்லது காரசாரமான உணவுகளை நீங்கள் அடிக்கடி சமைத்தால் மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இந்த 2 பொருள் போதும்.. ரொம்ப ஈஸியா பர்னரை புதுசு போல மாற்றலாம்..!