உப்பு நீரில் பாதங்களை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உப்பு நீரில் பாதங்களை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். பாதங்களில் இருக்கும் அழுக்கு மட்டும் நீங்குவதில்லை. பாதங்கள் வழியாக உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கிறது.
நிம்மதியான தூக்கம்
உப்பு நீரில் பாதங்களை ஊற வைப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குறிப்பாக மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பில் காலை ஊற வைத்தால், உடலுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்கும். தசையில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, வழியைக் குறைக்கும். உப்புத் தண்ணீரில் குளித்தாலும், உடலில் இருக்கும் அசதி நீங்கும். வலி மறையும். நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
கர்ப்பிணிகளுக்கு நன்மை
கர்ப்பிணிப் பெண்களுக்கு உப்பு நீர் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். சூடான நீரில் எப்சம் உப்பு சேர்த்து குளித்தால், தசை வலி, முதுகு வலி மற்றும் கால் பிடிப்புகளுக்கு உதவும். குளியலில் கிடைக்கும் வெப்பம் தசைகளை தளர்த்த உதவும். கர்ப்ப காலத்தில் பொதுவாக கால் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க எப்சம் உப்பு குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.
தசை இறுக்கம் மற்றும் மூட்டுகளில் வலி
வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கால்களை ஊற வைத்தால் இறுக்கமான தசைகளை தளர்த்தி வீக்கத்தைக் குறைக்க உதவும். கீல்வாதம் போன்ற நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த முறை உதவியாக இருக்கும். காலில் பாக்டீரியாக்கள் இருந்தாலும் விரைவில் சரியாகிவிடும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.