இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சியான வாக்கிங் செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதய நோயாளிகள் பல விஷயங்களை கவனம் செலுத்தினாலும், குளிர்காலங்களில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
Winter heart attacks in tamil
மாரடைப்புக்கும் குளிர்காலத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?
குளிர்ந்த காலநிலைக்கும், மாரடைப்பு வருவதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை புரிந்துகொள்ள முதலாவதாக குளிர்கால வானிலையில் நம்முடைய உடல் இயக்கங்களின் மாற்றங்கள் குறித்து புரிந்து கொள்வது அவசியமாகிறது. கடும் குளிர் காலங்களில் வெப்பத்தை தக்க வைப்பதற்காக நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. உடலில் ஒரு நிலையான வெப்பநிலையை தக்க வைப்பதற்காக உடல் இப்படிதான் மெனக்கெடுக்கிறது.
குளிர்ந்த காலநிலையில் உடலில் ஏற்படும் தாக்கத்தால் வெப்பநிலை குறைகிறது. இந்த நேரத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், உடலில் மற்ற பாகங்களுக்கு குறிப்பாக இதயத்திற்கு இரத்தம் பாய்வது கடினமாக மாறுகிறது. இந்த செயல்பாட்டின் போது ரத்த ஓட்டத்திற்கு முக்கிய பங்களிக்கும் இதய உள்ளிட்ட உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படுவது குறைக்கப்படுகிறது. ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறைவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
மக்களுடைய உடல் செயல்பாடு தற்போதைய காலகட்டங்களில் குறைந்து வருகிறது. அதிலும் குளிர்காலங்களில் சொல்லவே தேவையில்லை. வாக்கிங் செல்லக் கூட மக்கள் யோசிக்கின்றனர். இப்படி உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். ஏனென்றால் ஏற்கனவே கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு போதிய உடற்செயல்பாடு இல்லாமல் போகும்போது அவை கட்டுக்குள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இந்த காரணங்களுக்கு மத்தியில் குளிர்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்த நிலைகள் போன்றவையும் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.
55
Reducing heart attack risk in winter in tamil
இது தவிர ஒருவர் அதிகமான மன அழுத்தத்துடன் காணப்படுவது மாரடைப்புக்கு முக்கியமான காரணமாகும். உங்களுடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தாமல் விட்டால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமையும். குளிர்காலத்தில் மாரடைப்புக்கான காரணங்களில் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், சர்க்கரை நோய் போன்றவையும் அடங்கும். குளிர்காலங்களில் இது போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த நோய்களை கட்டுக்குள் வைப்பது மாரடைப்பிலிருந்து உங்களை காப்பாற்றும்.