Guava Leaves For Diabetes : சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யா இலை உதவுகிறது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. மருந்து மற்றும் முறையான வாழ்க்கை முறையால் மட்டுமே இதை கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் தான் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் உணவு முறை சரியாக இருந்தால் மட்டுமே, எடுத்துக் கொள்ளும் மருந்தும் நல்ல முறையில் வேலை செய்யும்.
24
Guava Leaves for Diabetes Patients in Tamil
ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலை ரொம்பவே நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனது சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா இலை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கொய்யா இலையை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கொய்யா இலை உடலில் பல பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும். இதில் பல வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளன. இது தவிர, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் அலர்ஜி எதிர்ப்பு போன்ற மருத்துவ குணங்களும் உள்ளது. இதனால்தான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகின்றது.
Guava leaves for lowering blood sugar levels in tamil
சர்க்கரை நோயாளிகள் கொய்யா இலையை எப்படி சாப்பிட வேண்டும்?
கொய்யா இலையை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தத் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். விரும்பினால் இதில் சிறிதளவு தேன் அல்லது வெள்ளம் சேர்க்கலாம். இது தவிர காலை வெறும் வயிற்றில் கூட கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம்.
குறிப்பு : நீங்கள் கொய்யா இலையை எடுத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு முன்பாக கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.