
எல்லா பருவ காலத்திலும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் வாழைப்பழம். இந்த பழம் மிகவும் மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகும். மேலும் இந்த பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதாவது கலோரிகள், புரதம், கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அடங்கி உள்ளன.
வாழைப்பழம் செரிமானம் மற்றும் நீதிப்பு சக்தியை மேம்படுத்தும் மூளையின் செயல்பாட்டிற்கு ரொம்பவே நல்லது. இது தவிர இதய ஆரோக்கியத்திற்கும், தச செயல்பாட்டிற்கும் மற்றும் இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழம் நமக்கு பல நன்மைகளை வழங்கினாலும், நாம் வாழைப்பழம் சாப்பிடுவதில் ஒரு பெரிய தவறு செய்கிறோம். இதனால் நன்மைக்கு பதிலாக தீங்கு தான் வரும். அது எந்த தவறு? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் ஒரு செவ்வாழை.. கொட்டி கிடக்கும் சத்துக்கள் தவிர இன்னொரு நன்மை இருக்கு!!
வாழைப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காதே!
நம்மில் பெரும்பாலானோர் வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி செய்வது முற்றிலும் தவறு. வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்கவே கூடாது. இதனால் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.
எப்படியெனில், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உடனே தண்ணீர் குடித்தால் அது பொட்டாசியுடன் கலந்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி, வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் இதனால் வாயு தொல்லை, அசிடிட்டி வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: வாழைப்பழம் நல்லது தான்.. ஆனா வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?
எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?
நீங்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
எப்போது சாப்பிடலாம்?
நீங்கள் வாழைப்பழத்தை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அதுபோல வாழைப்பழத்தை நீங்கள் தயிர், யோகர்ட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். ஏனெனில் இவற்றில் அதிகளவு கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன. இவை உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
வாழைப்பழம் நன்மைகள் :
நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் நீங்கும் தெரியுமா? ஆம், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மன அழுத்த ஹார்மோனை ஒழுங்குபடுத்த உதவுகிறது. அதுபோல வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் உங்களது எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சருமத்திற்கு நல்லது மற்றும் இது கொலாஜான் உற்பத்தியை அதிகரிக்கும்.
மேலே சொன்ன நன்மைகளை நீங்கள் பெற விரும்பினால் வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனேயே ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீர்கள் அப்போதுதான் வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறுவீர்கள்!