
தீபாவளி வரப்போகிறது. ஒவ்வொரு நாளும் தீபாவளி பண்டிகையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு பண்டிகையாகும். ஆனால், அதற்கு முன் ஒரு செய்ய வேண்டிய ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், வீட்டை சுத்தம் செய்வது தான்.
தீபாவளி பண்டிகைக்கு முன் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். வீட்டை சுத்தமாக வைத்தால், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீட்டை சுத்தம் செய்வது சிலர் கடினமாக உணர்கிறார்கள். எனவே அவர்களுக்காக வீட்டை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ் :
திட்டம் அவசியம்:
தீபாவளி வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற பணியை தொடங்க வேண்டும். அலமாரிகள் மற்றும் படுக்கை அறையை சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. சில மணி நேரங்களிலேயே சுத்தம் செய்து விடலாம்.
ஆனால் சமையலறையை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சற்று கடினமான விஷயம். எனவே சமையலறை அலமாரிகள், டைல்ஸ் போன்ற அனைத்தையும் ஒரே நாளில் சுத்தம் செய்ய முடியாது என்பதால் இரண்டு மூன்று நாட்களில் சுத்தம் செய்து விடலாம்.
சமையலறையில் இருக்கும் எண்ணெய் திசுக்களை போக்க சூடான நீரில் சிறிதழை வினிகர் கலந்து அந்த நீரைக் கொண்டு துடைக்க வேண்டும். மேலும் சமையலறையில் தேவையில்லாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள்.
தேவையற்றதை நீக்கவும்:
கடந்த ஓராண்டாக நீங்கள் பயன்படுத்தா, உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற இந்த தீபாவளி தான் சரியான தருணம் ஆகும். இந்த ஆண்டு வரும் தீபாவளியை நீங்கள் இன்னும் சிறப்பாக விரும்பினால் நீங்கள் பயன்படுத்தாத ஆடைகள், பாத்திரங்கள், அல்லது பிற பொருட்களை ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு வழங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக கிடைக்கும்.
பித்தளை பாத்திரங்களை கழுவுதல்:
பித்தளை பாத்திரங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் அது சீக்கிரமாகவே அதன் பளபளப்பை இழந்து மங்கிவிடும். எனவே அவற்றை மெருகேற்ற அரை கப் வினிகர், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மாவு ஆகியவற்றை நன்கு கலந்து அவற்றைக் கொண்டு பித்தளை பாத்திரங்கள் சிலைகள் விளக்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்து பாருங்கள். அவை பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் ஒட்டடை வராமல் இருக்கணுமா? தண்ணீருடன் இதை கலந்து ஒரு முறை பயன்படுத்தினால் போதும்!!
மண் விளக்குகளை சுத்தம் செய்ய:
பலர் தங்களது வீடுகளில் கையால் வண்ணம் தீட்டப்பட்ட மண் விளக்குகளை தான் வைத்திருப்பார்கள் அவை உணர்வு பூர்வமான தொடர்புடையது என்று கூட சொல்லலாம். எனவே மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் விளக்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய மென்மையான துணிக்கைகள் அல்லது பருத்தித் துணைகளை பயன்படுத்தலாம் அழுத்தி சுத்தம் செய்தால் அவை உடைந்து விடும்.
ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய:
தீபாவளி நாளில் பிரிட்ஜ் சுத்தமாக இருக்க, வினிகரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை கொண்டு ஃப்ரிட்ஜை நன்கு துடைத்து எடுக்கவும். இதனால் பிரிட்ஜ் துர்நாற்றம் அடிக்காமல் நறுமணம் வீசும். மேலும் பிரிட்ஜில் தேவையில்லாத பொருட்கள் வைக்க வேண்டாம். எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்ற வரைமுறைப்படி அடுக்கி வைக்கவும்.
இதையும் படிங்க: பேக்கிங் சோடாவை 1 ஸ்பூன் 'இப்படி' பயன்படுத்தினால் மொத்த வீட்டையும் பளீச்னு சுத்தம் பண்ணிடலாம்!!