டர்பைன் வென்டிலேட்டர்கள் பயன்பாட்டின் நன்மைகள்:
மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய எக்ஸ்டாஸ்ட் பேன்களை விட, ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இயங்க கூடிய டர்பன் வென்டிலேட்டர்கள் மிகவும் சிறப்பானவையாகும்.
ஆம், இந்த டர்பைன் வென்டிலேட்டர்கள் இயக்குவதற்கு என தனியாக மின்சார செலவு கிடையாது, சிறிதளவு காற்று அடித்தலேபோதும், அந்த விசையே அதனைச் சுழச்செய்கிறது.
தொழிற்சாலைகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் எக்ஸ்டாஸ்ட் பேன்கள் மூலம் குறிப்பிடத்தக்க வெப்ப காற்று வெளியாகும்.
ஆனால், இந்த டர்பன் வென்டிலேட்டர்கள் தொழிற்சாலையின் உச்சி வரை பரவி இருக்கும் வெப்பத்தை இழுந்து அகற்றும்.
ஒருவேலை மின்சாரம் தடைபட்டாலோ, மோட்டார் பழுதானாலோ எக்ஸ்டாஸ்ட் பேன்கள் வேலை செய்யாமல் நின்றுவிடும். ஆனால் காற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கக்கூடிய டர்பைன் வென்டிலேட்டர்கள் வெப்பக் காற்றை 24 மணிநேரமும் வெளியேற்றும்.
எக்ஸ்டாஸ்ட் பேனை விட, டர்பைன் வென்டிலேட்டர்கள் மின்சார நுகர்வு முதல் செயல்திறன் வரை, சிறந்த வகை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையே ஆலை உரிமையாளர்களும் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க...Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?