பழங்களை ஜூஸாக மாற்றும்போது, கரையாத நார்ச்சத்தை இழக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே ஜூஸ் குடிக்கும் போது நார்ச்சத்து இல்லாமல், வெறும் சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் மட்டுமே உடலில் சேரும்.
ஜூஸாக குடிக்கும் போது நார்ச்சத்து மட்டுமின்றி, நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் உயிரியக்கச் சேர்மங்களும் இழக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம், முழு பழங்களையும் சாப்பிடும் போது அத்தியாவசிய உணவு நார்ச்சத்தை வழங்குகின்றன. இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகின்றன. மேலும் ஊட்டச்சத்துக்களின் சீரான உட்கொள்ளலை வழங்குகின்றன. எனவே ஜூஸாக குடிப்பதை காட்டிலும் பழங்களாக சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.