Rainy Season Foot Care In Tamil
மழைக்காலம் வந்தாலே கூடவே பலவிதமான பிரச்சனைகளும் வரும். அவற்றில் ஒன்றுதான் கால்களை பாதிக்கும் பூஞ்சை தொற்று நோய். மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அதுவும் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்றது என்பதால், இதனால் கால்களில் அரிப்பு, சிவத்தல், வலி, தோல் உரிவு, செதில், காலில் அசெளகரியம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
இது மிகவும் மோசமான தொற்று என்பதால், இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நீண்ட காலம் நீடித்திருக்கும். எனவே, மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: காலில் உள்ள கருமை நீங்க வேண்டுமா..? உடனே 'இந்த' டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
Rainy Season Foot Care In Tamil
மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வருவதற்கான காரணங்கள்:
1. ஈரப்பதம் : மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வருவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான ஈரப்பதம் தான். இது பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உண்டாக்குகிறது.
2. அழுக்கு மற்றும் தூசியில் நடப்பது : மழைக்காலத்தில் அழுக்கு மற்றும் தூசி இடங்களில் நடந்தால் காலில் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
3. பிறர் பொருட்களை பயன்படுத்துவது : மழைக்காலத்தில் பிறரது துண்டுகள், காலணிகள், காலுறைகள் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதனால் காலில் தொற்றுவர வாய்ப்பு உள்ளது.
4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் : உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வரும்.
5. சுகாதாரமின்மை : மழைக்காலத்தில் காலை சுத்தமாக பராமரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பூஞ்சை தொற்று வரும்.
Rainy Season Foot Care In Tamil
காலில் பூஞ்சை தொற்று வந்ததற்கான அறிகுறிகள்:
அரிப்பு, சிவந்து போதல், வீக்கம், செதில்கள், கொப்புளங்கள், கால் விரல்களுக்கு இடையே வெடிப்புகள், காலில் துர்நாற்றம் அடிப்பது ஆகியவை மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வந்ததற்கான அறிகுறிகள் ஆகும்.
காலில் பூஞ்சை தொற்றை தடுப்பது எப்படி?
மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்றைத் தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அவை..
1. மழைக்காலத்தில் வீட்டில் இருந்தாலோ அல்லது வெளியில் போயிட்டு வந்தாலோ தினமும் காலில் சோப்பு போட்டு சூடான தண்ணீர் வைத்து கால்களை கழுவி நன்கு உலர்த்தவும். அதுவும் குறிப்பாக கால்களுக்கு இடையே நன்றாக கழுவுங்கள்.
2. மழை காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வராமல் இருக்க காலுறைகள் மற்றும் காலணிகளை அடிக்கடி மாற்றுங்கள். குறிப்பாக சுத்தமான பருத்தி காலுறைகளை மட்டுமே அணியுங்கள். ஈரமான காலணிகளை ஒருபோதும் அணிய வேண்டாம்.
Rainy Season Foot Care In Tamil
3. நீங்கள் பயன்படுத்தும் காலணிகளை நன்கு கழுவி அவ்வப்போது வெயிலில் காய வைக்கவும்.
4. வேப்பிலை வெள்ளைப் பூண்டு போன்ற வீட்டு வைத்தியங்களை நீங்கள் பயன்படுத்தலாம். இது தவிர தோல் மருத்துவரையும் அணுகவும்.
5. மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வராமல் இருக்க பிறரது துண்டுகள், காலுறைகள், காலணிகள் போன்ற பொருட்களை பயன்படுத்தாதீர்கள். உங்களது பொருட்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதுபோல உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.
குறிப்பு:
மழைக்காலத்தில் காலில் பூஞ்சை தொற்று வருவது ஒரு பொதுவான பிரச்சனை என்பதால், மேலே சொன்ன முறைகளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் கால்களை பூஞ்சை தொற்றில் இருந்து பாதுகாக்கலாம்.
இதையும் படிங்க: கால் ஆணி உள்ள இடத்தில் 'இத' மட்டும் தடவுங்க.. 5 நாட்களில் காணாமல் போகும்!