வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க IRCTC அறிமுகப்படுத்தியுள்ள சீப் அண்ட் பெஸ்ட் டூர் பேக்கேஜ்

Published : Oct 18, 2024, 11:05 AM ISTUpdated : Oct 18, 2024, 11:07 AM IST

IRCTC Tour Package : பாலி, துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கம்மி ரேட்டில் டூர் சென்றுவர ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

PREV
15
வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க IRCTC அறிமுகப்படுத்தியுள்ள சீப் அண்ட் பெஸ்ட் டூர் பேக்கேஜ்
IRCTC International Tour Package

ஐஆர்சிடிசி மூலம் சுற்றுலா செல்ல நிறைய டூர் பேக்கேஜுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லவும் ஐஆர்சிடிசி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் உங்களுடைய அனைத்து பயணம் மற்றும் தங்கும் வசதிகளையும் ஐஆர்சிடிசியே ஏற்படு செய்து கொடுத்துவிடும். அப்படி சென்னையில் இருந்து பாலி, துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கான டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது,

25
IRCTC Tour Package to Srilanka

அதன்படி சென்னையில் இருந்து இலங்கைக்கு வெறும் 65 ஆயிரத்து 500 செலவில் சென்று வர ஒரு அசத்தல் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி இருக்கிறது. 5 இரவு மற்றும் 6 பகல் அடங்கிய இந்த டூர் பேக்கேஜில் இலங்கையின் கொழும்பு, கண்டி, கத்தரகாமா, நுவாரா எல்லியா போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்க முடியும். சென்னையில் இருந்து டிசம்பர் 1ந் தேதி கிளம்பும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒட்டுமொத்த பயணத்திற்கான விமான டிக்கெட், ஹோட்டல், பஸ், சாப்பாடு, சுற்றிக்காட்ட டூரிஸ்ட் கைடு, இன்சூரன்ஸ் ஆகியவையும் இந்த 65,500க்குள் அடங்கும்.

இதையும் படியுங்கள்... பெங்களூர் முதல் மைசூர் வரை.. ஜாலியாக சுற்றி பார்க்கலாம்.. விலை ரொம்ப கம்மி தான்

35
IRCTC Tour Package to Bali

அடுத்ததாக சென்னையில் இருந்து பாலிக்கு சுற்றுலா சென்று வர 84 ஆயிரத்து 900 ரூபாய் டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 15 தேதி கிளம்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த டூர் பேக்கேஜில் 4 இரவு மற்றும் 5 பகல் பாலியை சுற்றிப்பார்க்கலாம். பாலி செல்ல ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும் என கூறப்படும் நிலையில், அதை 84 ஆயிரத்து 900 ரூபியிலேயே சுற்றிக்காட்ட உதவுகிறது இந்த டூர் பேக்கேஜ். இதிலும் விமான டிக்கெட், கேப், சாப்பாடு, தங்கும் வசதி, இன்சூரன்ஸ், டூரிஸ்ட் கைடு ஆகியவை அடங்கும்.

45
IRCTC Tour Package to Dubai

அதேபோல் துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுவர ஐஆர்சிடிசியில் ஒரு சீப் அண்ட் பெஸ்ட் டூர் பேக்கேஜ் இருக்கிறது. நவம்பர் 28-ந் தேதி சென்னையில் இருந்து தொடங்கும் இந்த டூர் பேக்கேஜில் 4 இரவு மற்றும் 5 பகல் துபாய் மற்றும் அபுதாபியில் சுற்றிப்பார்க்கலாம். இதற்காக 91 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் விமான டிக்கெட்டுகள், தங்கும் வசதி, சாப்பாடு அனைத்துமே அடங்கும்.

55
IRCTC Tour Package to Singapore

சிங்கப்பூர், மலேசியாவை சுற்றிப்பார்க்கவும் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. அந்த டூர் பேக்கேஜின் படி நவம்பர் 22ந் தேதி சென்னையில் இருந்து கிளம்பி 5 இரவுகள் 6 பகல் சிங்கப்பூர், மலேசியாவை சுற்றிப்பார்க்க முடியும். இதற்கான விமான டிக்கெட், தங்கும் இடம், சாப்பாடு, டூரிஸ்ட் கைடு, போக்குவரத்து என அனைத்திற்கும் சேர்த்து 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...  IRCTCயின் அசத்தலான ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் 6 நாள் டூர் பேக்கேஜ்: ரூ.5000 மானியம் வழங்கும் அரசு

click me!

Recommended Stories