மா இலையின் ஆரோக்கிய நன்மைகள்:
1. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
மா இலையில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் நம்மை அணுகாது.
2. செரிமானத்தை மேம்படுத்தும்
மா இலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் நீங்கும்.
3. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
சர்க்கரை நோயாளிகளுக்கு மா இலை வரப் பிரசவம் ஆகும். ஆம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மா இலை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மா இலை பொடியை வெந்நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.