மா இலைல தோரணம் கட்டுவாங்க.. ஆனால் அதை சாப்பிட்டால் உடல் எடை கணிசமா குறையும்னு தெரியுமா?
Mango Leaves For Weight Loss : நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது முதல் பல்வேறு நன்மைகளை மா இலைகள் தருகின்றன. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
நம் நாட்டை பொறுத்தவரை மா இலைகளை விழா நாட்களில் தோரணமாக கட்டி பார்த்திருப்பீர்கள். இது தவிர மா இலைகளில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உண்டு. இது பலருக்கும் தெரியாது. இது எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.
மா இலைகள் எடையை எப்படி குறைக்கும்? : மா இலைகளில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை உத்வேகப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் காணப்படும் மாங்கிஃபெரின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. நம் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க இது உதவுகிறது.
இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாடு: எடை குறைப்பில் முக்கியமானது இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிப்பது. மா இலைகளை உண்பதால் இன்சுலின் உணர்திறன் மேம்படும். இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராகும். மா இலைகளை சாப்பிடுவது அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தும். அடிக்கடி உணவு எடுத்துக் கொள்வதை குறைக்க உதவும்.
செரிமானம் மேம்படும்: உடல் எடையை குறைக்க செரிமானம் சரியாக இருக்க வேண்டும். மா இலைகள் இதற்கு உதவுகின்றன. வீக்கம், மலச்சிக்கல் ஆகிய செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வாக மா இலைகளை பயன்படுத்தலாம். மா இலைகளில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவும்.
கொழுப்பை குறைக்கும்: உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். இது உள்ளுறுப்புகளை சுற்றி தேங்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தவிர்க்கப்படுகிறது. கொழுப்பினால் உண்டாகும் இதய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
நச்சு நீக்கி: கொழுப்பு அதிகம் சேர்ந்தால் வளர்சிதை மாற்றம் தடைபடும். ஆகவே எடையை குறைக்க நினைத்தால் உடலுக்கு தீமை செய்யும் நச்சுகளை அகற்றுவது அவசியம். மா இலைகளில் இயற்கையாகவே நச்சு நீக்கும் தன்மை உண்டு. இது கல்லீரலை சுத்தப்படுத்தி, உடலை மேம்படுத்த உதவும்.
இதையும் படிங்க: வெந்நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து காலையில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
எப்படி மா இலையை சாப்பிடலாம்? : ஒரு நாளுக்கு ஒரு மா இலையை மென்று சாப்பிடலாம். அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் மா இலையை போட்டு அல்லது மா இலை பொடி கலந்து டீ தயாரித்து அருந்தலாம்.
இதையும் படிங்க: ஈஸியா வெயிட் லாஸ் பண்ணனுமா? தினமும் காலையில் இதை எல்லாம் ஃபாலோ பண்ணா போதும்..
யார் மா இலை எடுத்து கொள்ளக் கூடாது? : கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் மா இலைகளை தவிர்க்கலாம். மற்றவர்கள் மா இலை பொடியை எடுத்து கொண்டால் 1 ஸ்பூன் மட்டும் எடுக்கவேண்டும்.