Published : Dec 07, 2024, 02:46 PM ISTUpdated : Dec 07, 2024, 02:57 PM IST
Radish Health Risks : முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சிலருக்கு அது தீங்கு விளைவிக்கும். எனவே யாரெல்லாம் முள்ளங்கி சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி வைட்டமின் சி, புரதம், கால்சியம், இரும்பு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி மலச்சிக்கல பிரச்சனையும் தீர்க்கிறது.
27
Radish Benefits In tamil
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்தையும் பராமரிக்க உதவுகிறது. முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும் சிலருக்கு முள்ளங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், முள்ளங்கியை உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது அது யார்யார் என்று இங்கு பார்க்கலாம்.
37
Radish interactions with medications in tamil
முள்ளங்கியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இரத்த சர்க்கரை நோய்
உங்களுக்கு ரத்த சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் முள்ளங்கி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இரத்த சர்க்கரை குறைவின் பிரச்சனையை ஏற்படுத்தும்.
47
Radish allergy symptoms in tamil
இரும்புச்சத்து அதிகம் இருந்தால்
உங்களது உடலில் இரும்புச் சத்து அதிகமாக இருந்தால் முள்ளங்கி சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, தலைசுற்றல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், கல்லீரல் பாதிப்பு, இரத்தப்போக்கு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தைராய்டு உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். ஏனெனில் முள்ளங்கியில் கோய்ட்ரோஜ்ன் என்னும் கலவை உள்ளது. இது தைராய்டு சுரப்பி செயல் இழப்பை ஏற்படுத்தும்.
உங்களுக்கு ஏற்கனவே நீரிழப்பு பிரச்சனை இருந்தாலோ அல்லது முள்ளங்கி அதிகமாக எடுத்துக் கொண்டாலோ இந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஏனெனில் உண்மையில் முள்ளங்கியில் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் போகத்துண்டும். இதன் காரணமாக உடலில் இருந்து நிறைய நீர் வெளியேறும் இதனால் நீர் இழப்புக்கு ஆளாக நேரிடும். விரும்பினால் குறைந்த அளவில் முள்ளங்கியை சாப்பிடுங்கள்.
77
Radish and allergies in tamil
ஹைபோ டென்ஷன்
நீங்கள் அதிகமாக உள்ளங்கியை எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தத்தை குறைத்து ஹைபோ டென்ஷன் அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்கனவே உயரத்தழுத்தை பிரச்சனை இருந்தால் அல்லது அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் நீங்கள் முள்ளங்கியை சாப்பிட வேண்டாம். இதனால் உங்களது ரத்த அழுத்தத்தில் மோசமான விளைவு ஏற்படும்.