தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருப்பதால் இந்த பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளைத் தவிர பழங்களையும் சாப்பிட வேண்டும். இந்த பருவ காலத்தில் பல வகையான பழங்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் கொய்யா.
கொய்யா ஆரோக்கியத்திற்கு ஒரு வரப் பிரசாதம் ஆகும். கொய்யா பல நோய்களையும் குணமாக்கும் சொல்லப்போனால். ஆரஞ்சு பழத்தை விட இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே குளிர்காலத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
25
Guava Benefits In Winter in tamil
குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவதற்கான காரணங்கள்:
குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கொய்யா குளிர்கால பழங்களில் ஒன்றாகும். இரண்டாவது இந்த பருவத்தில் ஏற்படும் சளி இருமல் ஆகியவற்றிலிருந்து கொய்யாப்பழம் நிவாரணம் அளிக்கிறது.
குளிர்காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு கொய்யா தான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், கொய்யாவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இருமல்:
குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் ஆபத்து அதிகரிக்கும். இதற்காக நாம் மருந்துகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் கொய்யாவில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் தொற்று நோய்கள் விரைவாக குணப்படுத்தும். இதன் காரணமாக தான் குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவது நல்லது என்று சொல்லுகிறார்கள் நிபுணர்கள்.
உடல் எடையை குறைக்கும்
குளிர்கால குளிர்ச்சியால் உடற்பயிற்சி ஏதும் செய்ய மாட்டோம். இதனால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கொய்யா சாப்பிட்டால் உடல் பருமனில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் கலோரிகள் மிக குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது தவிர இதில் தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இதை எடை குறைக்க உதவுகிறது மட்டுமின்றி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
55
Winter health tips in tamil
கொலஸ்ட்ரால் & பிபி
குளிர்காலத்தில் கொய்யா சாப்பிட்டு வந்தால் இதயம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும். எப்படியெனில் இதில் இருக்கும் பொட்டாசியம் நரம்புகளை தளர்த்தி ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இது தவிர இதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
குளிர்காலத்தில் உங்களது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு பிரச்சனை ஏற்பட்டால் கொய்யா சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் கொய்யாவில் இருக்கும் சத்துக்கள் சர்க்கரை நோயை எதிர்க்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்கும்.