
பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது மிகவும் அவசியம். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை கொடுக்கும் விரும்புகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறார்கள்.
பள்ளியில் குழந்தையின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கல்வி மூலம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பெற்றோரும் தங்களது குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் பள்ளியில் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்காக பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படுகிறது.
இது வெறும் சாதாரண கூட்டம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால், சில சமயங்களில், சில பெற்றோர்கள் ஆசிரியர் சொல்வதை மட்டுமே கேட்பாரே தவிர ஆசிரியர்களிடம் குழந்தைகளைப் பற்றிய கேள்விகளை கேட்க மாட்டார்கள் அல்லது ஓரிரு கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். ஆனால் அது தவறு. மேலும் சிலருக்கு என்ன மாதிரி கேள்விகளை கேட்க வேண்டும் கூட தெரிவதில்லை நீங்களும் அப்படித்தானா? பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் கேட்க வேண்டிய சில முக்கியமான கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க எல்லாத்துக்கும் குறை சொல்றாங்களா? அதுக்கு இதான் காரணம்!!
உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் கேட்க வேண்டிய 6 முக்கிய கேள்விகள்:
1. என் குழந்தை வகுப்பில் கவனம் செலுத்துகிறதா?
2. என் குழந்தை எந்த படத்தை நன்றாக படிக்கிறது? மற்றும் எந்த பாடத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
3. என் குழந்தை பள்ளியில் எப்படி நடந்து கொள்கிறது? பிற குழந்தைகளுடன் நட்பாக இருக்கிறதா.. இல்லையா?
4. என் குழந்தை படிப்பை தவிர வேறு ஏதாவது ஒன்றில் ஆர்வமாக இருக்கிறதா?
5. குழந்தை படிப்பில் சுமாராக இருந்தால் டியூஷன் அவசியமா?
6. என் குழந்தை நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்ற கேள்விகளை நீங்கள் உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் கேட்கும் போது அவர் வீட்டிலும் பள்ளியிலும் எப்படி இருக்கிறார் என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தையின் நடத்தை சிறப்பாக இருந்தால் அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு:
- முதலில் உங்கள் குழந்தை வீட்டிலிருந்து தான் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் பள்ளியிலும் சிறப்பாக இருப்பார்கள். இதற்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
- சில சமயங்களில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் குழந்தையை பற்றி ஆசிரியர் ஏதாவது சொன்னால் வீட்டிற்கு வந்த உடனேயே பெற்றோர் திட்டுவது வழக்கம். ஆனால் இந்த தப்பை செய்யாதீர்கள். இதனால் குழந்தை ரொம்பவே பாதிக்கப்படும். அதற்கு பதிலாக அவர்களிடம் அன்பாக பேசுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைங்க படித்ததும் மறக்கிறார்களா? ஈஸியா ஞாபகம் வச்சுக்க '5' சூப்பர் டிப்ஸ்