
நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை காலையில் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஆம், மோசமான வாழ்க்கை முறையில் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் சர்க்கரை நோய். இதனால் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். நீண்ட காலமாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை செய்கிறார்கள்.
ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் பிற உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்று சொல்லுகின்றன. மேலும் உயர் ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் காலை வெறும் வயிற்றில், என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கனுமா? மறந்தும் '5' விஷயங்களை பண்ணாதீங்க!!
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை:
நெய் & மஞ்சள்:
சர்க்கரை நோயாளிகள் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் மஞ்சள் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். நெய் நாள் முழுவதும் சர்க்கரை சாப்பிடும் ஆசையிலிருந்து விலக்கி வைக்கும். அதுபோல மஞ்சள் வீக்கத்தை குறைக்கும்.
இலவங்கப்பட்டை தண்ணீர்:
இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டை ஊற வைத்து பிறகு மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால் இந்த தண்ணீரில் டீ போட்டு கூட குடிக்கலாம். இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தய தண்ணீர்:
சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பது ரொம்பவே நல்லது. இதற்கு இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற விட்டு பிறகு காலையிலிருந்து வெந்தயத்துடன் அதை தண்ணீரையும் குடிக்க வேண்டும்.
ஊற வைத்த உலர் பழங்கள்
சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைவதை உணர்ந்தால் உடனே வெறும் வயிற்றில் புரோட்டின் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது ஊறவைத்த பாதாம், வால்நட் போன்ற உலர் பழங்கள் சாப்பிடுங்கள்.
ஆம்லா ஜூஸ்:
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலை டீடாக்ஸ் செய்யும் பானத்தை குடிப்பது ரொம்பவே நல்லது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதற்கு 100 மில்லி தண்ணீரில், 30 மில்லி ஆம்லா சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் செண்டர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உங்களிடம் நெல்லிக்காய் இல்லை என்றால் எலுமிச்சை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: அமர்ந்தபடி செய்ற இந்த பயிற்சி 'சுகர்' ஏறாமல் தடுக்கும்!! இனி கஷ்டப்பட்டு வாக்கிங் போகாதீங்க.. சூப்பர் டிப்ஸ்