மாதவிடாய் சமயத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
ரத்த ஓட்டம் சீராக இருக்கும்:
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். இது தவிர வயிற்று வீக்கம் உட்பட்ட பல உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய
நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தம் குறையும்:
மாதவிடாய் சமயத்தில் நீங்கள் வீட்டிலோ அல்லது வெளியிலயோ வாக்கிங் செல்வதால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல மாதவிடாய் நாட்களில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த நாட்களில் மன அழுத்தத்துடன் இருந்தால் மாதவிடாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.