
நெய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. அதுவும் குறிப்பாக, ஆயுர்வேதத்தில் நெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நெயில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் நம்முடைய உடலின் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது. ஆக்சிஜனேற்றத்துடன் பல அத்தியவாசிய தாதுக்களும் இதில் உள்ளது. இவை உடல் மற்றும் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
இருந்தபோதிலும் நெய்யை சரியான முறையில் எடுத்துக் கொள்ளாவிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், நெய்யை சில சமயம் நாம் தவறான முறையில் எடுத்துக் கொள்ளும் போது அது நம் ஆரோக்கியத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நெய் சாப்பிடும் போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நெய்யுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதவை:
தேன்
சில இனிப்பு பண்டங்களில் நெய் மற்றும் தேன் சேர்த்து தயாரிப்பார்கள். ஆனால் இந்த இரண்டு கலவையும் சேர்ந்த பண்டத்தை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது தவிர பித்த தோஷ சமநிலையை ஏற்படுத்தும்.
குளிர்ந்த பொருட்கள்
நெய்யை எந்த ஒரு குளிர்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் நெய் கனமானது மற்றும் ஒட்டுத்தன்மை உடையதால், இதை குளிர்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலை உறைய வைக்கும். இது தவிர செரிமான பிரச்சனை, எடை அதிகரிப்பு, மற்றும் பித்த தோஷத்தின் சமநிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடலின் நச்சுக்கள் இருந்தால்
உங்களது உடலில் ஏதேனும் நச்சுக்கள் இருந்தால் நெய் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. நச்சுக்கள் கனமானவை மற்றும் ஒட்டும் தன்மை உடையது என்பதால் இந்த சமயத்தில் நெய் சாப்பிடும் போது ஜீரணிப்பது கடினமாக. இதனால் செரிமான ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: தினமும் '1' ஸ்பூன் நெய்.. வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் 'இப்படி' ஒரு மாற்றமா?
நெய் சாப்பிடும் சரியான முறை:
- நெய் தினமும் சமையலில் பயன்படுத்தலாம். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
- சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
- மதிய உணவு சாப்பிடும் போது அரை ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இரவு உணவில் நெய் சாப்பிடக்கூடாது.
- நெய் எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக உப்பு சேர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் நெய் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
- துவரம் பருப்பு பாசிப்பருப்பு போன்ற பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவது மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நெய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
செரிமான பிரச்சினை, வாயு தொல்லை, வாந்தி உணர்வு, கல்லீரல் வீக்கம் மற்றும் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: நெய் '1' ஸ்பூன்.. தினமும் இரவில் பாதத்தில் தடவுங்க; பல பிரச்சனைகளுக்கு தீர்வு!!