பெற்றோரிடம் குழந்தைகள் குறை சொல்வதற்கான காரணங்கள்:
கவனத்தை ஈர்ப்பது:
எல்லா விஷயத்திற்கும் புகார் சொல்லும் பழக்க இருக்கும் குழந்தை பல சமயத்தில் கவனத்தை ஈர்க்கும் ஒரு வழியாகும். இந்த பழக்கம் உள்ள குழந்தை தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், தனது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
விளையாட்டில் சிறு சண்டைகள்:
குழந்தைகள் விளையாடும் போது சின்ன சண்டைகள் வருவது சகஜம் தான். இது மூலம் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். எனவே, இதுகுறித்து அவர்கள் உங்களிடம் புகார் செய்தால் நீங்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் அதை நீங்கள் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.