உருளைக்கிழங்கு வேக வைக்குறப்ப குக்கர் கருப்பாகுதா? தடுக்க டிப்ஸ்!

Published : Dec 06, 2024, 12:16 PM ISTUpdated : Dec 06, 2024, 12:26 PM IST

Prevent Cooker From Turning Black : உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது குக்கர் கருப்பாக மாறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை தடுப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

PREV
15
உருளைக்கிழங்கு வேக வைக்குறப்ப குக்கர் கருப்பாகுதா? தடுக்க டிப்ஸ்!
Prevent Cooker From Turning Black In Tamil

தற்போது எல்லாருடைய வீடுகளிலும் குக்கரின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. குக்கர் இல்லாமல் எந்தவொரு சமையலும் முழுமையடையாது. குக்கரில் சமையல் வேலை மிகவும் எளிதாக செய்யப்படுகிறது. ஆனால் குக்கரை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அது மிகவும் அழுக்காகி, பிறகு சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாகிவிடும்.

25
cooker tips in tamil

அந்த வகையில், குக்கரில் பெரும்பாலானோர் உருளைக்கிழங்கு வேகவைத்து பயன்படுத்துகிறார்கள்.  ஆனால், அதன் பிறகு குக்கரின் உட்புறம் கருப்பு ஆக இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் குக்கரில் இருக்கும் கருமை நீங்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களது குக்கரில் இருக்கும் கருமை நீங்கி புதியது போல ஜொலிக்க வைக்க உதவும் சில குறிப்புகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வேலை ஈஸினு குக்கரில் இந்த '5' உணவுகளை  சமைக்குறீங்களா? இந்த தவறை பண்ணாதீங்க!!

35
Cooker maintenance tips in tamil

உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது குக்கர் கருப்பாக மாறுவதை தடுக்க டிப்ஸ்:

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழம் மட்டுமின்றி அதன் தோலிலும் உள்ளன. எனவே உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது அதனுடன் 1 ஸ்பூன் உப்பு மற்றும் ரெண்டு அல்லது மூன்று எலுமிச்சை பல தோல்களை போட்டு வேக வைக்கவும். இப்படி செய்தால் குக்கர் கருப்பாக மாறாது.

45
Cleaning cooker after boiling potatoes in tamil

உருளைக்கிழங்கு வெடிக்காமல் இருக்க:

குக்கரில் உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது சில சமயங்களில் அதில் வெடிப்பு ஏற்படும். எனவே இந்த பிரச்சினையை தடுக்க நீங்கள் உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு மூன்று விசில் விட்டு பிறகு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு அதன் மூடியை திறக்கும் போது உருளைக்கிழங்கில் வெடிப்பு இருக்காது. 

இதையும் படிங்க:  குக்கரில் விசில் அடிக்கும் போது தண்ணீர் லீக் ஆகுதா? அப்ப 'இத' மட்டும் தெரிஞ்சு வச்சுக்கோங்க இனி எப்பவும் வராது

55
How to Clean Cooker After Boiling Potatoes in tamil

குக்கரில் உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது இதை நினைவில் கொள்:

- குக்கரில் உருளைக்கிழங்கு வேக வைக்கும் போதெல்லாம் தண்ணீரின் அளவை குறைவாக வைக்கவும். இல்லையெனில் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.

- அதுபோல உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்க வேண்டும் பெரிய உருளைக்கிழங்கு வேக வைத்தால் சில சமயங்களில் அதன் உள்ளே பச்சையாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories