
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா இறந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவரின் மறைவு அவரது ரசிகர்கள், நெருங்கியவர்கள் மத்தியில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களில் ஒருவர் டாடாவின் இளம் மேலாளர் சாந்தனு நாயுடு. ரத்தன் டாடா, சாந்தனு நாயுடு இருவருக்கும் விலங்குகள் மீது இருந்த அதீத அன்பின் மூலம் ஆழமான பிணைப்பு உருவானது.
இதை தொடர்ந்து பல ஆண்டுகளாக ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக வேலை செய்யும் வாய்ப்பு சாந்தனுவுக்கு கிடைத்தது. இதனால் டாடாவும் சாந்தனுவும்ம் நல்ல நண்பர்களாக இருந்தனர். சாந்தனு நாயுடுவின் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் டாடா ஒரு வலுவான பங்கைக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கும் சாந்தனு நாயுடு, வாசிப்பு மீதான தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக முன்னிறுத்தி, தனது புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
சாந்தனு நாயுடு Bookies என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது இது பொது இடங்களில் மக்களை ஒன்றுசேர்ந்து அமைதியாகப் படிக்கும் திட்டம். என்று அவரின் LinkdedIn பதிவில் குறிப்பிட்டுள்ளார்.. ஆரம்பத்தில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் புனே மற்றும் பெங்களூருவிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை, புக்கிஸ் திட்டம் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய சாந்தந்து திட்டமிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில் “ஒரு சோதனை முயற்சியாக ஆரம்பித்த திட்டம் இப்போது ஒரு இயக்கம். புத்தகங்களை மீண்டும் கொண்டு வாருங்கள். வாசகர்கள் இந்த நகரங்களில் அமைதியான வாசிக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் ஜெய்ப்பூர் வாசிப்பு அமர்வை சாந்தனு நாயுடு அறிவித்தார். "ஜெய்ப்பூர் வாசகர்கள் புத்தகங்களை வாசிக்க இதுவே நேரம். உடனே பதிவு செய்யவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியின் மூலம், மக்களிடையே படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், ஒரு சமூகமாக வாசிப்பது பழக்கத்தை வளர்க்க உதவும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.. “இந்த திட்டத்தின் முழு சாராம்சமும் எப்போதும் வாசிப்பை மீண்டும் கொண்டுவருவதாகும். மனித அனுபவத்திற்கு வாசிப்பு மிகவும் மையமானது என்று தோன்றுகிறது எனவும், ஆனால் தற்போது வாசிப்பு குறைந்து வருகிறது.
சமூக உணர்வாக நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் உங்களை விட வேகமாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும்” என்று சாந்தனு நாயுடு கூறியுள்ளார்.. பலரும் பொதுவாக மொபைல் போன்களால் திசைதிருப்பப்படுவதையும், அவர்கள் குறுகிய நேரமே கவனமாக இருப்பதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்..
யார் இந்த சாந்தனு நாயுடு?
சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் மிகவும் நம்பகமான மேலாளர்களில் ஒருவர். தனது உயிலிலும் சாந்தனுவை ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார். டாடாவின் மறைவைத் தொடர்ந்து, நாயுடு அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்து, LinkedIn-ல் ஒரு உணர்வுப்பூர்வ பதிவை பகிர்ந்துள்ளார். “இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச்சென்ற ஓட்டை, என் வாழ்நாள் முழுவதையும் அதை நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்புக்கு கொடுக்க வேண்டிய விலை. குட்பை, மை டியர் லைட்ஹவுஸ்," என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.