
சமையலறையில் பயன்படுத்தப்படும் வெந்தயம் பல மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளன. வெந்தயம் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமாக இதில் பல மதிப்பு பண்புகள் மற்றும் நன்மைகள் உள்ளன. அதாவது வெந்தயத்தில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, இரும்புசத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ், வைட்டமின் பி6 வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை வயிற்றுப் பிரச்சனைகள் முதல் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், எதையும் அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெந்தயமும் அப்படித்தான். ஆம், வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, இருமல், வீக்கம், வாயு மற்றும் சிறுநீரில் துர்நாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மட்டுமின்றி உடலில் சில பிரச்சனை இருந்தால் வெந்தயம் சாப்பிடுவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் தெரியுமா? எனவே எந்தெந்த நபர்கள் வெந்தயத்தை சாப்பிடக்கூடாது. மீறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சர்க்கரை நோயாளிகள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நன்மை பயக்கும் என்றாலும், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். இது அவர்களுக்கு ஆபத்து. எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் வெந்தயம் சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில், வெந்தயம் இயற்கையாகவே வெப்பத் தன்மையுடையது என்பதால், கர்ப்பிணிகள் இதை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரத்தப் போக்கு பிரச்சினை ஏற்படும். இதுதவிர வாயு, குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு போன்று செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: வெந்தயத்தை கூந்தலில் 'இப்படி' யூஸ் பண்ணுங்க... முடி வேகமாக வளரும்!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:
நீங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயத்தில் சோடியம் குறைவாக உள்ளதால் இது ரத்த அழுத்த அளவை கணிச்சமாக குறைத்து விடும். நீங்கள் அளவுக்கு அதிகமாக வெந்தயம் எடுத்துக் கொண்டாலோ நீங்கள் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஒவ்வாமை உள்ளவர்கள்:
வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆம், வெந்தயத்தில் இருக்கும் பண்புகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் தடிப்புகள், தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுபோல வாந்திக்கு முதல் பிரச்சனை உங்களுக்கு இருதல் வெந்தயம் சாப்பிட வேண்டாம்.
சுவாச பிரச்சனைகள்;
நீங்கள் சுவாச நோயாளிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால் வெந்தயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது மருந்துகளுடன் வினைபுரிந்து மோசமான விளைவை ஏற்படுத்தும்.
குறிப்பு: மேலே சொன்ன பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் வெந்தயம் சாப்பிடும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசிக்க மறக்காதீர்கள்.