
பொதுவாக நாம் அனைவரும் பெரிதாக முட்டைக்கோஸை கண்டு கொள்ள மாட்டோம். ஆனால், அதில் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், அதிலிருந்து வரும் வாசனை பலருக்கு பிடிப்பதில்லை. இதனால் யாரும் அதை விரும்பி சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், இன்றைய அறிவியல் முட்டைக்கோஸின் அற்புத நன்மைகளை கண்டுபிடித்து அதை நமக்கு சொல்லுகின்றன. அதிலும் குறிப்பாக பச்சை முட்டைகோஸை விட ஊதா முட்டைக்கோஸ் தான் அதிக நன்மை பயக்கும் தெரியுமா?
ஆம், ஊத முட்டைக்கோஸில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை பல உடல்நல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. இந்த முட்டைகோஸ் காலிஃப்ளவர் காலை ரக்கோலி குடும்பத்தை சார்ந்தது. ஊதா முட்டைக்கோஸில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் போல சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு தரும். எனவே, ஊதா முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உடலில் இருக்கும் கொழுப்பினை கரைக்க உதவும் "முட்டை கோஸ் சூப்"!
சருமத்திற்கு நன்மை பயக்கும்:
ஊதா முட்டைக்கோஸில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வீக்கத்தைக் குறைக்கும்:
ஊதா முட்டைக்கோஸில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தவிர, அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் ஊதா முட்டைக்கோஸை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற காய்கறி இதுதான்..!!
இதயத்திற்கு நல்லது:
ஊதா முட்டைக்கோஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இது தவிர, ஊதா முட்டைக்கோஸ இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு அபாயம் ஏற்படுவதை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைகிறது:
ஊதா முட்டைக்கோஸ் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து சக்தியாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, உடலில் நோய்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. முக்கியமாக, இதில் உள்ள வைட்டமின் சி குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும்:
ஊதா முட்டைக்கோஸில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் நுகர்வு நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
எடையை கட்டுப்படுத்தும்:
ஊதா முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இவை எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை சாப்பிட்டால், வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். மேலும் மீண்டும் மீண்டும் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடையும் அதிகரிக்காது.