நம்மில் பலர் டீ பிரியர்கள். அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடிக்க விரும்புவார்கள். காலையில் மட்டும் குடிப்பார்களா என்றால் இல்லை. மீண்டும் மாலை 4 மணி ஆனதும் டீ குடிப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களால் டீ குடிக்கவில்லை என்றால்... வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால் அப்படி மாலை நேரத்தில் டீ அனைவரும் குடிக்கக் கூடாது. சிலர் அறவே குடிக்கக் கூடாது. எப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
25
Who Should Avoid Evening Tea In Tamil
டீ, காபியில் உள்ள காஃபின் நம் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இரவு தூங்கச் செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு எந்தவிதமான காஃபின் கலந்த பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது. அதாவது... மாலை நேரத்தில் டீ, காபியைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் இரவு 11-12 மணிக்கு தூங்கினால், மதியம் 2 மணிக்குப் பிறகு நீங்கள் டீ அல்லது காபி குடிக்கக் கூடாது.
மாலை நேரத்தில் டீ குடித்தால், கல்லீரல் நச்சு நீக்கம் செய்யாமல் கார்டிசோல் அளவுகளையும், வீக்கத்தையும் அதிகரிக்கும். கூடுதலாக, இது செரிமானத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மாலை நேரத்தில் டீ குடிக்கக் கூடாது. 1 கப் கணக்கில் டீ குடித்துவிட்டு... பிறகு எங்களுக்குத் தூக்கம் வருவதில்லை என்று பலர் புகார் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள்... முதலில் இந்த மாலை நேர டீ குடிப்பதை நிறுத்தினால்... இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்.
45
Who Should Avoid Evening Tea In Tamil
சிலர் மன அழுத்தம், பதட்டம் உள்ளதால் டீ குடிக்கின்றனர். ஆனால்... உண்மையில் அப்படி மன அழுத்தம், பதட்டத்தில் உள்ளவர்கள்தான்... டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வயிற்றில் வாயு அதிகமாக உருவாகுதல், உலர்ந்த சருமம், உலர்ந்த கூந்தல் உள்ளவர்கள் மாலை நேரத்தில் டீ குடிக்கக் கூடாது. மேலும் வாயுத் தொல்லை அதிகரிக்கும். உலர்ந்த சருமப் பிரச்சனை அதிகரிக்கும். உங்கள் உடலில் ஹார்மோன்களின் சமநிலையின்மை இருந்தாலோ அல்லது உங்கள் எடை குறைவாக இருந்தாலோ, மாலை நேர தேநீரைத் தவிர்க்கவும்.
உங்கள் வளர்சிதை மாற்றம் பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அடிக்கடி வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் ஏற்படும், உங்களுக்குப் பசி எடுக்காது, மாலை நேர டீ குடிக்க வேண்டாம். இந்தப் பிரச்சனைகள் உள்ளவர்கள் முடிந்த அளவு டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.