1.வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்..
பெண்கள் செய்யும் பொதுவான தவறு, அதிக குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ குளிப்பது. கூந்தல் பராமரிப்புக்கு எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் பயன்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிப்பது நல்லது.
அதிக குளிர்ந்த அல்லது சூடான நீரில் தலைக்கு குளித்தால், எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் பயன்படுத்தியதால் எந்தப் பலனும் இருக்காது. கூந்தல் வறட்சி அதிகரிக்கும். எனவே, வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஹேர் மாஸ்க் அல்லது எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. இதனால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.