பருப்பு சாதத்தில் இருக்கும் சத்துக்கள்
புரதம்: பருப்பு சாதத்தில் புரதச்சத்து நிறைய உள்ளது. தினமும் இதை சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் தசைகளை வளர்க்கவும் தேவையான புரதம் கிடைக்கும். அதே போல் நமது உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் கார்போஹைட்ரேட் சாதத்தில் நிறைய இருக்கு.
வைட்டமின்கள், தாதுக்கள்: சாதம், பருப்பில் வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மாதிரி நிறைய தாதுக்கள், வைட்டமின்கள் இருக்கு. நார்ச்சத்து பருப்புல மட்டுமில்லாம சாதத்துலயும் நல்ல அளவில் இருக்கு. இது ஜீரணத்துக்கு உதவும்.
பருப்பு, சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்: சாதம், பருப்பு இரண்டிலும் நார்ச்சத்து நிறைய இருக்கு. இது நம்ம செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.. இதை சாப்பிடுவதால் அஜீரணம், மலச்சிக்கல் மாதிரி பிரச்னைகள் வராது.