
புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் அவர்களது சரும மிகவும் மெல்லிய உணர் திறன் கொண்டதாக இருப்பதால் உடனே நோய் தொற்றுகள் தாக்கும் அபாயம் ஏற்படும். அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லபோனால் மிகவும் எளிதில் அவர்கள் நோய்வாய்ப்படுவார்கள்.
இந்த காலகட்டத்தில் பெரியவர்களை விட புதிதாக பிறந்த குழந்தைகளை தான் நோய் தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுவதால், பிறந்த குழந்தைகளை மழை காலத்தில் பாதுகாப்பாது ரொம்பவே முக்கியம். இந்த மழை காலத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளை கொசுக்கள், கிருமிகள், வைரஸ்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை பராமரிக்க டிப்ஸ்:
மழைக்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
1. வீட்டை தூய்மையாக வைக்கவும்
உங்களது வீடு தூய்மையாக இருக்கவில்லை என்றால் எளிதில் தொற்று நோய்கள் ஏற்படும். எனவே வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் எப்போதுமே சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருங்கள். இதுவும் குறிப்பாக உங்களது வீட்டில் புதிதாக பிறந்த குழந்தை இருந்தால் குழந்தையை குளிப்பாட்டும் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்திருங்கள். இதற்கு தினமும் உங்களது வீட்டை கிரிமினல் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
2. டயப்பர்களை அடிக்கடி மாற்றுங்கள்
மழை காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர்களை மாற்றுங்கள். ஒருவேளை நீங்கள் மாற்றாமல் நீண்ட நேரம் ஈரத்துடன் வைத்திருந்தால் குழந்தைக்கு அரிப்பு, சொறி, எரிச்சல் உள்ளிட்ட சரும பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக மழை காலத்தில் வானிலை மிகவும் ஈரப்பதமாக இருக்கும். இந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றவில்லை என்றால் டயப்பரால் சொறி, சருமத்தில் அலர்ஜி ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு டயப்பர் மாற்றிவிடுங்கள்.
3. மழைக்கால ஆடைகள்
மழை காலத்தில் குழந்தைகளுக்கு இறுக்கமான அல்லது தடுமனான ஆடைகளை பலரும் அணிவார்கள். ஆனால் அது தவறு. இதனால் அவர்களுக்கு சுவாசிப்பதில் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு நல்ல வசதியான சுவாசிப்பது ஏற்ற ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்கவும். இதனால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படாது. அதுபோல அதிக குளிர்ச்சியை தாங்கும் லேசான கம்பளி ஆடைகளை அவர்களுக்கு அணியலாம்.
4. கொசுக்களில் இருந்து பாதுகாக்கவும்
மழைக்காலத்தில் கொசுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். கொசுக்கள் மூலமாகவே பரவு நோய்கள் அதிகம் என்றே சொல்லலாம். எனவே மழை காலத்தில் குழந்தைகளை கொசுக்களின் கடியில் இருந்து பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் உங்களது குழந்தையை கொசு வலைக்குள் தூங்க வையுங்கள்.
அதுபோல குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடி இருக்கும் ஆடைகளை அணியுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஒரு போதும் கொசு கடிக்கு பயன்படுத்தப்படும் கிரீம் எதுவும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவற்றில் ரசாயனங்கள் இருப்பதால் அவை குழந்தைகளை பாதிக்கும். அதுபோல வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவற்றில் கொசுவலை அமைக்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!
5. தாய்ப்பால் அதிகம் கொடுங்கள்
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே, காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
குறிப்பு:
மழைகாலத்தில் உங்கள் வீடு மட்டுமே சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் சளி, இருமல் உடனே பிடிப்பதால் வெதுவெதுப்பான நீர் குடிக்க கொடுக்கவும்.
இதையும் படிங்க: குழந்தைங்க தினமும் 'பூண்டு பால்' குடித்தால் மழைகாலத்துல சளி தொந்தரவே இருக்காதாம் தெரியுமா?