இந்த காலத்தில் பலர் இளம் வயதிலேயே வயதானவர்கள் போல தோற்றமளிக்கின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. வெயில், மாசு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் உங்கள் வயதை விட அதிகமாக காட்டும். முகத்தில் சுருக்கங்கள், சருமம் பொலிவிழந்து காணப்படும். முருங்கை இலைகளைப் பயன்படுத்தினால், மீண்டும் இளமையாக மாறுவீர்கள்.
ஏனெனில், முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து பாதுகாக்கவும், சருமத்தைப் பொலிவாக்கவும் உதவுகின்றன. மல்டி வைட்டமின்கள் இருப்பதால், எந்த வகை சருமத்திற்கும் முருங்கைக் கீரை அற்புதமாக செயல்படுகிறது. சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், டீடாக்ஸ் செய்யவும், சருமத்தை மென்மையாக்கவும், முகப்பருக்களைத் தடுக்கவும், சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் மாற்றவும் உதவுகிறது.