இன்றைய பிஸியான வாழ்கை முறையில், காலையில் எழுந்து அவசர அவசரமாக வயிற்றை நிரப்பும் வகையில், காலை உணவாக ஒரு கப் காபி ரொட்டி, சிட்ரஸ் பழங்கள் இல்லை என்றால் இரவில் மீதம் இருந்த பிரிட்ஜில் வைத்த உணவுகளை சாப்பிடுவார்கள்.
சிட்ரஸ் பழங்களில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மேலும் ரொட்டி அடிக்கடி இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் காபி அஜீரணத்திற்கும் வழிவகுக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் வறுத்த அல்லது அமில உணவுகளைத் தவிர்ப்பது நமக்கு நல்லது. இந்த வெயில் காலத்தில் தர்பூசணி போன்ற குளிர்ச்சியான பானங்களை காலை உணவாக எடுத்து கொள்வது நல்லது.