Infertility: ஆண்களே அலர்ட்...உடல் பருமன் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமாம்..? புதிய ஆய்வின் ஷாக்கின் ரிப்போர்ட்

First Published Jun 16, 2022, 1:44 PM IST

Men Infertility: ஆண்களுக்கு சிறு வயதிலும், இளமை பருவத்திலும் உடல் பருமன் அதிகமாக இருந்தால், அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்பட காரணமாகலாம் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

men infertility

உடல் பருமன் பிரச்சனை...?

இன்றைய நவீன காலகட்டத்தில், மோசமான வாழ்வியல் மாற்றத்தால் அதிக பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் அதிக கொழுப்பு சேர்தல், அதிக சர்க்கரை சேர்தல், எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருத்தல் போன்றவற்றால் தான் உடல் பருமன் ஏற்பட்ட முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால பாதிப்புகள் தரும் நோய்கள் உருவாகலாம். 
 

infertility

உடல் பருமன் காரணமாக ஆண் மலட்டுத்தன்மை..?

இவை தவிர்த்து, சமீபத்திய ஆய்வின் மூலம் ஆண்களுக்கு சிறு வயதிலும், இளமை பருவத்திலும் உடல் பருமன் அதிகமாக இருந்தால், அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்பட காரணமாகலாம் என்று தெரியவந்துள்ளது.  சிறு வயதில் உடற்பருமன் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதுடன், விரைவில் கொள்ளவும் குறைகிறது. இதனால், விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்படுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆகவே ஆண்பிள்ளைகள் உடற் பருமனை தவிர்ப்பது அவசியம். 

உடல் பருமனை சரிசெய்யும் வழிமுறைகள்..?

தினசரி உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் போன்றவற்றின் மூலம் பருமனை குறைக்கலாம். மேலும் கொழுப்புள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஐஸ்கிரீம் , ஃபாஸ்ட் பூட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுதல் அவசியம். இவ்வாறு செய்தால் மட்டுமே உடல் பருமனை குறைக்க முடியும்.

click me!