ஜூன் 11ஆம் தேதி கோவிலில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த ஷாமா, முன் கூட்டியே தனக்கு தானே பாரம்பரிய முறையில் இன்று தாலி கொண்டார். இந்த திருமணத்தில், மெஹந்தி, இசைக்கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ், மணப்பெண் உடை உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த திருமண விழாவில் நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.