Diabetes control Food: சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க....ஆயுர்வேத மருத்துவத்தின் 5 முக்கிய உணவு குறிப்புகள்

First Published | Jun 5, 2022, 3:50 PM IST

Diabetes control Food: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதைக் கட்டுக்குள் வைப்பதற்கு, ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் சில உணவு பழக்கவழக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Diabetes

இன்றைய நவீன வாழ்கை முறையில், சர்க்கரை நோய் என்பது 40 ஐ கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாற துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பில்லாமை போன்றவையாகும். 

Diabetes

இவை நமக்கு நீரழிவு நோய் போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை வழங்குகிறது. மேலும், சர்க்கரை நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை தவிர்ப்பதற்கு நாம் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். அவை, என்னென்ன என்று கீழே பார்த்து தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Tap to resize

Diabetes

ஆயுர்வேத மருத்துவத்தின் 5 முக்கிய உணவு குறிப்புகள்...

1. ஒரு டீஸ்பூன் பாகற்காய் சாற்றை தினமும் நம் உணவில் சேர்த்து கொண்டால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

2. தினமும் சிறிய அளவில் வெங்காயம், சிறிய பூண்டு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மேலும், முளைகட்டிய பயிறு வகைகள். முட்டை,  போன்றவையும் அடிக்கடி அவசியம் சேர்த்து கொள்ளுங்கள்.

3. பச்சை காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, காய்கறி சூப், கிரீன் டீ , மதியம் காய்கறி கலவையில் உணவு என உங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். 

Diabetes

4. நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, குறைய உதவும்.அதேபோன்று, கார்போஹைட்ரேட்தான் சர்க்கரை நோய்க்கு எதிரியாக உள்ளது. கார்போஹைட்ரேட்தான் குளுக்கோஸாக மாறி உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை அதிகரித்துவிடும். எனவே, அரிசி உணவை அதிகம் தவிர்ப்பது நல்லது. 

5. அதேபோன்று, வாரம் இரண்டு முறையாவது, இரத்தத்தின் சர்க்கரை அளவை சரி பார்த்து கொள்ளுதல் அவசியமாகும். இதனால் சர்க்கரை அளவை சீரான நிலையில் நிர்வகிக்க முடியும். மேலும், இவை உங்களுக்கு சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்துவிட உதவியாக இருக்கும்.

 மேலும் படிக்க....Stress: மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி? எதை பாலோ பண்ணனும், எதை தவிர்க்க வேண்டும், நச்சுனு நாலு டிப்ஸ்

Latest Videos

click me!