Isha Ambani
தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அம்பானி வீட்டு பெண்கள் எப்போதுமே தங்கள் விலை உயர்ந்த நேரத்தியான உடைகள் மற்றும் நகைகள் மூலம் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
Isha Ambani
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் அணிந்திருந்த ஆடம்பர உடைகள் மற்றும் நகைகள் பேசு பொருளாக மாறியது.
Isha Ambani
முன்னதாக ஆனந்தின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த லெஹங்கா மற்றும் அவர் அணிந்திருந்த பிளவுஸ் தொடர்பான புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற துணியில் நகைகளை பதித்து வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட லெஹங்கா, ஜாக்கெட் மற்றும் துப்பட்டா ஆகியவற்றை இஷா அணிந்திருந்தார்..
ஆனால் இந்த ரத்தினங்களை தைக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இவை அனைத்துமே கையால் பதிக்கப்பட்டவை என்பது இந்த ஜாக்கெட்டின் கூடுதல் சிறப்பு. பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைக்கும் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகிய ஆடை வடிவமைப்பாளர்கள் தான் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.
Isha Ambani
தனது இந்த ஆடையை வடிவமைக்க தான் வைத்திருந்த ரூபி, வைரங்கள், மரகதங்கள் நகைகளை இஷா கொடுத்தாராம். , அவை தவிர குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் பல புதிய நகைகளை வாங்கி அவரின் ஆடையில் வடிவமைப்பாளர்கள் தைத்துள்ளனர்.
Isha Ambani
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஷா. தனது திருமண நகைகளை அணிந்திருந்தார். கோடிக்கணக்கில் மதிப்புள்ள வைரத்தால் செய்யப்பட்ட பல அடுக்கு நகைகள் இஷாவின் அழகை மேலும் அதிகரித்தது