ஏசி பராமரிப்பு
கோடைக்காலத்தில் குளிர்ச்சியை அனுபவிக்க வீட்டிலும் அலுவலகத்திலும் ஏர் கண்டிஷனர் அல்லது ஏசி நிறுவப்படுகிறது. ஏசியை தொடர்ச்சியாக நீண்ட காலம் நல்ல நிலையில் வைத்திருக்க வழக்கமான சர்வீஸ் செய்வது மிகவும் அவசியம். ஏசியில் இருந்து நல்ல குளிர்ச்சியைப் பெற, குறிப்பிட்ட கால இடைவெளியில் எரிவாயு அளவை செக் செய்து நிரப்பப்பட வேண்டும்.
ஏசி கேஸ் கசிவு
ஆனால் ஏசியில் இருந்து அடிக்கடி கேஸ் கசிந்தால் அது ஒரு பெரிய பிரச்சனை காரணமாக அமையும். . அதாவது ஏசியை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம். ஏசியில் இருந்து அடிக்கடி கேஸ் கசிவு ஏற்பட்டால், அது முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இதே பிரச்சனை தொடர்ந்தால் ஏசியை மாற்ற வேண்டியிருக்கும்.
கேஸ் கசிவு பிரச்சனை
வருடத்திற்கு ஒரு முறைக்கு மேல் ஏசியில் இருந்து கேஸ் கசிந்தால், அது உங்கள் ஏசியில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படப்போவதன் அறிகுறியாக இருக்கலாம். ஏசி நல்ல நிலையில் இருந்தால், கேஸ் கசிவு இல்லாமல் வருடக்கணக்கில் நன்றாக வேலை செய்யும்.
ஏசி மாற்றுவது எப்போது?
உங்கள் ஏசியில் இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், புதிய ஏசியை வாங்குங்கள். அதன் மூலம் நல்ல குளிர்ச்சியான் காற்றும் கிடைக்கும், மின்சாரமும் மிச்சமாகும், பராமரிப்பு செலவும் குறையும்.