ഉലുവ വെള്ളം
வெந்தையம்: நம்முடைய கிச்சனில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் வெந்தயம் கண்டிப்பாக இருக்கும். அதிக முடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் வெந்தையத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தயத்தை அப்படியே ஊறவைத்து சாப்பிடுவதைவிட அதனை முளைகட்டி சாப்பிடுவது நல்லது.
வெந்தயம் விதைகள்: நீண்ட, அடர்த்தியான மற்றும் அழகான கூந்தலுக்கு வெந்தையம் உறுதுணையாக இருக்கும். வெந்தயம் விதைகளில் புரதம் நிறைந்துள்ளதால் கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றைத் தடுக்கிறது. கூந்தல் வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை ஈரப்பதமாக்குகின்றன. ஒரே இரவில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து, உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 15 - 20 நிமிடங்கள் ஊறவைவத்து லேசாக ஷாம்பூவைப் பயன்படுத்தி குளித்தால் கூந்தல் மென்மையாகும். முடி உதிர்தல் கட்டுப்படும்.
oil bath
பொடுகு பிரச்சினை நீங்கும்:
முடி உதிர்தல் அதிகம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். தலையில் பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.