அம்பானி வீட்டுத் திருமணத்தில் எல்லார் கண்ணும் இஷா அம்பானியின் நெக்லஸ் மேலதான்... என்ன விசேஷம் தெரியுமா?

Published : Jul 13, 2024, 03:51 PM IST

இஷா அணிந்த வண்ணமயமான நெக்லஸில் பிங், நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'கார்டன் ஆஃப் லவ்' என்று இந்த நெக்லஸுக்குப் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இஷா அம்பானிக்காக மிகவும் ஸ்பெஷலாக இந்த நெக்லஸ் தயாரிக்கப்பட்டது. இந்த நெக்லஸை உருவாக்க 4000 மணிநேரம் ஆனதாகச் சொல்லப்படுகிறது.

PREV
15
அம்பானி வீட்டுத் திருமணத்தில் எல்லார் கண்ணும் இஷா அம்பானியின் நெக்லஸ் மேலதான்...  என்ன விசேஷம் தெரியுமா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதனால் அம்பானியின் திருமணம் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

25

அம்பானி வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை பார்த்தாலே, அவர்கள் ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு எப்படி ஸ்பெஷலாக ஆயத்தமானார்கள் என்பது புரியும். குறிப்பாக, இஷா அம்பானி தனது சகோதரரின் திருமணத்தில் மிக அழகான தோற்றத்தில் வலம் வந்தார். குறிப்பாக அவர் அணிந்திருந்த நெக்லஸ் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

35

ஒவ்வொரு திருமண விழாவிலும் இஷா அம்பானி புதுமையான ஃபேஷனில் தோன்றி அனைவரையும் அசர வைப்பார். அம்மா நீதா அம்பானியைப் போலவே இஷா அம்பானியும் ரங்காத் காக்ரா உடையில் காணப்பட்டார். இன்னும் வசீகரிக்கும் அழகைக் கொடுக்க கழுத்தில் ஜொலிக்கும் நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். அனைவரின் பார்வையும் அவருடைய நெக்லஸ் மீதே இருந்தது.

45

இஷா அணிந்த வண்ணமயமான நெக்லஸில் பிங், நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'கார்டன் ஆஃப் லவ்' என்று இந்த நெக்லஸுக்குப் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இஷா அம்பானிக்காக மிகவும் ஸ்பெஷலாக இந்த நெக்லஸ் தயாரிக்கப்பட்டது. இந்த நெக்லஸை உருவாக்க 4000 மணிநேரம் ஆனதாகச் சொல்லப்படுகிறது.

55

இந்த அழகான நெக்லஸின் மையத்தில் ஹெலைட்டாக இதய வடிவில் நீல வைரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நீல வைரத்தைச் சுற்றி வைரத்தால் செய்யப்பட்ட சிறிய பூக்கள் பதிக்கப்பட்டுள்ளன. கண்ணைப் பறிக்கும் அழகுடன் ஜொலிக்கும் இந்த நெக்லஸில் வைரங்கள் தீப்பிழம்புகள் போலவும் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலவும் தோற்றம் அளிக்கின்றன என்பதுதான் இதன் தனிச்சிறப்பாம்.

click me!

Recommended Stories