அம்பானியின் மருமகளாக ஆகவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முந்தைய ஹல்தி விழாவில் பூவால் நெய்யப்பட்ட துப்பட்டாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மருமகளாக ஆகவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முன் ஜூலை 8ஆம் தேதி நடந்த ஹல்தி விழாவில், மஞ்சள் நிற லெஹங்கா சோலியில் பூவால் நெய்யப்பட்ட துப்பட்டாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்துள்ள பூவால் செய்யப்பட்ட துப்பட்டா மற்றும் லெஹங்கா சோலியை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூர் வடிவமைத்துள்ளார்.
மொக்ரா மலர் மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட துப்பட்டா மஞ்சள் சாமந்தி பூ ஜரிகையையும் கொண்டிருக்கிறது. இந்த அற்புதமான ஆடையில் கொள்ளை அழகுடன் கனவு தேவதை போல காட்சி அளிக்கிறார் ராதிகா மெர்ச்சன்ட்.
ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உள்ளது.