அதிக சுய இன்பம் பாலியல் வாழ்க்கையை பாதிக்குமா..? இது உண்மையா..? தெரிஞ்சுக்கலாம் வாங்க..

First Published | Jul 12, 2024, 10:00 PM IST

Excessive Masturbation : சுய இன்பம் பாலியல் ஆசையை திருப்திப்படுத்தும். ஆனால், அதிகப்படியான சுய இன்பம் துணையுடன் உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் தெரியுமா..?

பொதுவாக, பெரும்பாலான ஆண்கள் பாலியல் திருப்திக்காக சுய இன்பம் செய்கிறார்கள். சுய இன்பம் எந்த விதத்திலும் ஆண்குறிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், அது அதிகமானால், அது உங்கள் துணையுடன் உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பாலியல் ஆர்வம் அல்லது ஆற்றல் குறையும்: ஒரு நபர் அடிக்கடி சுய இன்பம் செய்து கொண்டால், அது அவருடைய அதிக பாலியல் ஆசையை நேரடியாக பாதிக்கும். மேலும், இதனால், அவர் தனது துணையின் ஆசையை நிறைவேற்ற முடியாது. அதுமட்டுமின்றி, துணையுடன் உடலுறவு கொள்ளும் ஆசையும் படிப்படியாக குறைந்து விடும்.

Tap to resize

இந்த பாதிப்பை ஏற்படுத்தும்: தினமும் சுய இன்பம் செய்வது சில ஆண்களுக்கு இயல்பானது. ஆனால், சிலருக்கு அது தீவிரமாக கூட இருக்கலாம். மேலும், அது உங்கள் ஆற்றல் நிலைகளை பாதிக்காத வரை, மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளில் தலையிடாத வரை நீங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு தினமும் சுய இன்பம் அதிகமாக செய்தால் பலவீனம், சோர்வு முன்கூட்டி விந்துதள்ளல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  பெண்கள் அதுல சுத்த வேஸ்ட்! இந்த வயசுக்கு பின் பாலுறவில் சுறுசுறுப்பே இருக்காதுனு சொல்றாங்களே.. அது உண்மையா?

உறவில் திருப்தி இல்லாதது: சுய இன்பம் என்று வரும்போது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை செய்கிறார்கள். பல சமயங்களில், பலர் சுய இன்பம் 
செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆனால், இப்படி இருந்தால், அந்த நபர் ஒருவருடான இருக்கும் உறவில் திருப்தி அடையமாட்டார்கள்.

இதையும் படிங்க:  'Benching Relationship' பத்தி தெரியுமா..? இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே ஃபேமஸாம்..

வீண் கற்பனை ஆசைகளை உருவாக்கும்: அதிகப்படியான சுய இன்பம் உடலுறவு தொடர்பான வீண் கற்பனை ஆசைகளை உருவாக்கும். மேலும், அதே போல் தங்கள் துணையும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், இது துணையுடன் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். முடிவில் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!