இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் பணக்காரராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 7.65 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நீதா அம்பானியை இவர் கடந்த 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்பொது வெற்றிகரமாக தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் நடத்தி முடித்துள்ளார்.
சரி முகேஷ் அம்பானியின் மூன்று சம்பந்திகளில் யார் பெரும் பணக்காரர்? அவர்கள் யாரென்பது குறித்து இப்பொது பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, அவர் திருமணம் செய்திருப்பது ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான். இவருடைய தந்தையின் பெயர் வீரேன் மெர்ச்சண்ட். இவர் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 760 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
34
Shloka metha
அதேபோல முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு, கடந்த 2019ம் ஆண்டு திருமணமானது. அவருடைய மனைவியின் பெயர் ஷ்லோகா மேத்தா. அவருடைய தந்தையின் பெயர் ரசல் மேத்தா, பிரபல வைர வியாபாரியான இவருடைய சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய்.
44
anand piramal
முகேஷ் அம்பானியின் மூத்த மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் ஒன்றாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991ம் ஆண்டு பிறந்த ஈஷா அம்பானிக்கு, கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. அவருடைய கணவரின் பெயர் ஆனந்த் பிரமல். ஆனந்தின் தந்தை தான் அஜய், இவரும் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். அம்பானியின் பணக்கார சம்பந்தியும் இவர் தான், அவருடைய சொத்து மதிப்பு சுமார் 12,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.