- Home
- Gallery
- Shloka : ஆனந்த் அம்பானி.. ஆடம்பர கல்யாணத்தில் 60,000 ரூபாய் சேலையில் வந்த மூத்த மருமகள் - வைரலாகும் தகவல்!
Shloka : ஆனந்த் அம்பானி.. ஆடம்பர கல்யாணத்தில் 60,000 ரூபாய் சேலையில் வந்த மூத்த மருமகள் - வைரலாகும் தகவல்!
Shloka Mehta : முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி தான் ஷ்லோகா மேத்தா. இவர் பிரபல தொழிலதிபர் ரஸ்ஸல் மேத்தாவின் மகளாவார்.

Shloka
ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, குறைந்தபட்சம் 5000 கோடியாவது செலவிட்டிருப்பர் என்று செய்திகள் பரவி வருகின்றது. ஆனால் அவரது மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தா, ஆனந்த் திருமணத்தில் கட்டியிருந்த சேலை இப்பொது மிகவும் வைரலாகி வருகிறது. அது ஏன் என்று இந்த பதிவில் காணலாம்.

Shloka mehta
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமணத்தில், குடும்பத்தினர் அனைவரும் அணிந்திருந்த ஆடைகள் பல கோடி ரூபாய் மதிப்பிலானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மன்னர் காலத்து உடை முதல், மாடர்ன் உடை வரை என்று, ஒட்டுமொத்த குடும்பமும், பலவிதமான ஆடம்பர ஆடைகளை அணிந்து அசத்தினார்.
anant wedding
ஆனால் ஆனந்த் அம்பானியின் அண்ணியும், முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளுமான ஷ்லோகா மேத்தா, இந்த திருமண விழாவில் ஒரு டிஷ்யூ சில்க் புடவையை அணிந்து வந்ததாக தகவல்களும், சில புகைப்படங்களும் வெளியாகி, அது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. அந்த சேலையின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
shloka saree
சுமார் 7.65 லட்சம் கோடி சொத்து கொண்ட முகேஷ் அம்பானி, சுமார் 5000 கோடி செலவு செய்து தனது இளைய மகனுக்கு திருமணம் நடத்துகிறார். ஆனால் அந்த திருமணத்தில் மிகமுக்கிய நபரான மூத்த மருமகள், 60,000 ரூபாய் சேலை கட்டிவந்தது ஏன் என்று புரியாமல், காரணத்தை தீட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.