கண்ணாடி பார்க்காதவர்கள் வெகு குறைவுதான். நாளொன்றுக்கு பல முறை கண்ணாடி பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் கண்ணாடிகள் இல்லாத காலமும் உண்டு. அப்போது மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியுமா? கண்ணாடிகள் தோன்றிய வரலாறை தெரிந்து கொண்டால், ஆச்சர்யப்படுவீர்கள். ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் என்பவர் தான் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளார். 1835 ஆம் ஆண்டில் தான் அவர் கண்ணாடியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.