வீட்டில் அலமாரிகளை திறந்தால் அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சமையலறை அலமாரிகளை திறக்கும் போது கரப்பான் பூச்சியை இருப்பதை பார்க்கும் போது நம்மில் பலருக்கும் எரிச்சலும், முக சுழிப்பும் உண்டாகும் . குறிப்பாக இந்த கரப்பான் பூச்சிகள் நாம் சமைத்த உணவுகளின் மீது ஊர்ந்து அல்லது பறந்து செல்லும் போது அவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. தவிர இது பல்வேறு நோய் கிருமிகளை பரப்புகிறது.இதனை கட்டுப்படுத்த ரசாயனம் கலந்த ஹிட்கள் இருப்பினும் அதனை கையாளும் போது மிக கவனமாக செயல்பட வேண்டி இருக்கும்.
பல 100 ஆண்டுகளாக இந்த கரப்பான் பூச்சி நமது சமையல் அறையில் பதுங்கி இருக்கின்றன. இவைகளை கூண்டோடு ஒழிக்க என்னென்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை:
கரப்பான் பூச்சிகளை கூண்டோடு அழிக்க சிறந்த மருந்து எனில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கலவையாகும். இதிலுள்ள சர்க்கரை கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் பணியை சிறப்பாக செய்கிறது. அதே சமயத்தில் பேக்கிங் சோடா அவைகளை கொல்லும்.
கரப்பான் பூச்சிகளை பார்க்கும் இடங்களில் இந்த கலவையை உருட்டி வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இதனை சாப்பிட்டு விட்டு கரப்பான் பூச்சிகள் சில நொடிகளில் இருந்து வருவதை காணலாம்.