அம்பேத்கர் என்ன செய்தார்?
இந்திய சமூகத்தில் இருந்து தீண்டாமை என்ற சமூகத் தீமையை வேரோடு அழிக்க அம்பேத்கர் அரும்பணியாற்றினார். இந்து மதத்திற்குள் சாதியினால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அடைய முடியாது என்ற கசப்பான உண்மையை அறிந்த அம்பேத்கர், இந்தியாவில் தலித்துகள் மேம்பாடு மற்றும் அதிகாரம் பெறுவதற்கான இயக்கத்தை உருவாக்கி அதை வழிநடத்தினார். மனுதர்மத்தின்படி ஏற்ற தாழ்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ள இந்து மதத்தை புறக்கணித்து, அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, நாக்பூரில் 5 லட்சம் ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்திற்கு மாறினார். டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை பொருளாதார மற்றும் சாதி பாகுபாடுகளின் அனுபவங்கள் ஆழமாகப் பாதித்தன. அவர் பௌத்த மதத்திற்கு மாறும் முன்பு வரை இந்த அனுபவங்களில் பலவற்றை அவர் தனது சுயசரிதை புத்தகமான 'விசாவுக்காக காத்திருக்கிறேன்' (Waiting For A Visa) என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.