அவரின் இந்த முயற்சியின் பலனாக அமெரிக்காவின் 49 மாகாண ஆளுநர்கள், அதிபர்கள் புஷ், ஒபாமா, கிளிண்டன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இதனை ஆமோதித்தனர். இதன்பின்னரே உடன் பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கிளவுடாவின் ஆசையாக இருந்தது. அது ஆரம்பத்தில் நடக்காவிட்டாலும், தற்போது இந்த உடன்பிறப்புகள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.